Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் ராவ் கட்சிக்கு செல்ல திட்டம்?
Most-Congress-MLAs-plan-to-go-to-the-Chandrashekhar-Rao

பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் ராவ் கட்சிக்கு செல்ல திட்டம்?

ஐதராபாத்,

முதல்–மந்திரி சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு (டி.ஆர்.எஸ்.) செல்வதற்கு அவர்கள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை 8 எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு அணி தாவ திட்டமிட்டு உள்ள நிலையில், மொத்த எம்.எல்.ஏ.க்களில் 3–ல் 2 பங்குக்கும் அதிகமானோர் தற்போது டி.ஆர்.எஸ். கட்சிக்கு வர இருப்பதாக சந்திரசேகர் ராவின் மகளும், எம்.எல்.ஏ.வுமான கல்வகுண்ட்ல கவிதா தெரிவித்து உள்ளார்.

சந்திரசேகர் ராவின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவதை பார்த்து காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தங்கள் கட்சிக்கு வர இருப்பதாக அவர் தெரிவித்தார். அதே நேரம் பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி மாற திட்டமிட்டு இருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.