பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » காட்டாத்துறை அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு ஒருவர் கைது
download

காட்டாத்துறை அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு ஒருவர் கைது

காட்டாத்துறை அருகே சாலையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள தங்க தாலி செயினை பறித்து சென்ற இரண்டு பேரில் ஒருவரை வாலிபர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : காட்டாத்துறை அருகே உள்ள குருவிளைக்காடு பகுதியை சேர்ந்தவர் விக்டர் ஜாண்சன். மனைவி புஷ்பசெல்வி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டு பக்கத்தில் உள்ள சாலையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக நம்பர் தெரியாத பைக்கில் வந்த இரண்டு பேரில் ஒருவர் புஷ்ப செல்வியின் கழுத்தில் கிடந்த தங்க தாலிச்செயினை பிடித்து இழுக்கவே அவர் அவனது கையை பிடித்தபடி சத்தம் போட்டு கீழே இழுத்து போட்டார். கீழே விழுந்த அந்த வாலிபர் எழுந்து ஓடவே தாயின் சத்தம் கேட்ட அவரது மகன் ஜெனிஸ் செர்லின் (31) அவ்விடம் ஓடிவந்தார்.

அவர் முன்னால் ஓடிக்கொண்டிருந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவரது தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் கேரளா மாநிலம், விழிஞம், கோட்டபுரம், பிறவிளாகம் பகுதியை சேர்ந்த சுஜின் (29) என்பது தெரிய வந்தது.

வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரில் தலைமறைவான வாலிபரையும் பைக்கையும் போலீசார் தேடி வருகின்றனர். திருட்டு போன 3 பவுன் தங்க நகையின் மொத்த மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரம் ஆகும்.