Home » தமிழகச் செய்திகள் » பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

தேசிய அளவில் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் பெற்றது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. இந்த விருதை குடும்பநலத்துறை இயக்குனர் ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது:- டெல்லியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மூலம் தேசிய குடும்ப கட்டுப்பாடு உச்சிமாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் கருத்தடை வளையம் பொருத்தியதில் தமிழ்நாடு தேசிய அளவில் முதல் இடம் பெற்றதற்காக விருது வழங்கப்பட்டது. பிரசவத்திற்கு பின் பொருத்தப்படும் இந்த கருத்தடை வளையங்கள் 5 ஆண்டு மற்றும் 10 ஆண்டு காலத்திற்கு பயன்படுத்தப்படும் வகையில் அமையும் தற்காலிக கருத்தடை முறையாகும். தமிழ்நாடு கடந்த 3 ஆண்டுகளில் இந்த கருத்தடை முறை பயன்பாட்டில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 2021-22-ம் ஆண்டில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 28 வளையங்கள் பெண்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இந்திய அளவில் முதல் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் குடும்பநலத்துறையும் கருத்தடை வளையம் பொருத்துவதில் இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65