Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » பெங்களூரூவில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
Delhis-Patiala-House-Court-orders-attachment-of-Vijay

பெங்களூரூவில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி,

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் விஜய் மல்லையா, லண்டனில் இருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார்.

இந்தநிலையில், விஜய் மல்லையா மீதான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரூவில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.