Templates by BIGtheme NET

புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி

கன்னியாகுமரி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று , குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்த மீனவர்கள் மற்றும் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் சென்றார். மாவட்ட எல்லையான காவல் கிணற்றில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்படது. இதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. மற்றும் அரசு உயர்அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காவல்கிணற்றில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேராக தூத்தூர் மீனவ கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள புனித யூதா ததேயூ கல்லூரியில் 8 கிராம மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

பின்னர் அங்கிருந்து மணவாளக்குறிச்சியை அடுத்த வெள்ளிமலை கல்படி ஏலாவில் விவசாயிகளை சந்திக்கிறார். அங்கு சேதமான பயிர் நிலங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அப்போது குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மாயமான மீனவர்களை மீட்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் புயல் நிவாரண பணிகள் பற்றி கேட்டறிகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குமரி மாவட்டம் வருகையையோட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.