Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » புத்தாண்டில் பங்குச் சந்தைகள் எழுச்சி
new-year-BAW

புத்தாண்டில் பங்குச் சந்தைகள் எழுச்சி

புத்தாண்டின் முதல் நாளான செவ்வாய்கிழமை மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் நடைபெற்ற பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.

வங்கித் துறை வாராக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, அந்த துறைக்கு நீண்ட காலம் பெரும் சுமையாக இருந்த வாராக் கடன் விகிதம் தற்போது குறையத் தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. அதன் எதிரொலியாக வங்கித் துறை பங்குகளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு காணப்பட்டது.

இதைத் தவிர, தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளையும் முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வாங்கினர்.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 186 புள்ளிகள் அதிகரித்து 36,254 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 47 புள்ளிகள் உயர்ந்து 10,910 புள்ளிகளில் நிலைத்தது. இதையடுத்து, புத்தாண்டை இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.