Templates by BIGtheme NET
French-Open-tennis-Switzerland-player-Roger-Federer

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் விலகல்

பாரிஸ் :

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் வருகிற 28-ந் தேதி முதல் ஜூன் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து 18 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தர வரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான 35 வயதான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) விலகி இருக்கிறார்.

கடந்த ஆண்டு காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடாத பெடரர் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். பெடரர் விலகி இருப்பதன் மூலம் களிமண் தரையின் மன்னன் என்று வர்ணிக்கப்படும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 10-வது முறையாக வெல்லக்கூடும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விலகல் குறித்து பெடரர் தனது பேஸ்புக் பதிவில், ‘நான் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஏ.டி.பி. போட்டிகளில் அதிக நாட்கள் விளையாட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு விலகல் முடிவை எடுத்து இருக்கிறேன்.

இந்த சீசனில் களிமண் தரையில் நடைபெறும் ஆட்டங்களை தவிர்த்து, புல்தரை மற்றும் கடினமான தரைகளில் நடைபெறும் போட்டிகளுக்கு தயாராகி வருகிறேன். இந்த ஆண்டு தொடக்கம் எனக்கு மாயாஜாலம் போல் இருந்தது. நீண்ட காலம் விளையாட போட்டி அட்டவணையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். இதனால் தான் இந்த முடிவுக்கு வந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*