Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » பிரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ் தமிழகத்தில் ஆலை தொடக்கம்
preethi-branch

பிரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ் தமிழகத்தில் ஆலை தொடக்கம்

மையலறை சார்ந்த மின்னணு பொருள் தயாரிக்கும் பிரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ் நிறுவனம் கேளம்பாக்கம் அருகே புதிய ஆலையை தொடங்கியுள்ளது. ரூ. 40 கோடி முதலீட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆலை தொடங்கப்பட்டுள்ளது.

கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் எனுமிடத்தில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி மற்றும் அசெம்பிளி பணிகள் மேற்கொள்ளப்படும்பிலிப்ஸ் குழுமத்தின் அங்கமாகத் திகழும் பிரீத்தி நிறுவனம் மிக்சர் கிரைண்டர் உள்ளிட்ட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி 14 நாடுகளில் இந்நிறுவனத் தயாரிப்புகள் விற்பனையாகின்றன. நிறுவனம் மிக்ஸி, டேபிள் டாப் கிரைண்டர், எலெக்ட்ரிக் குக்கர், அடுப்புகள், காபி மேக்கர் உள்ளிட்ட 13 பொருள்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் னிவாசன் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 10 ஆயிரம் விற்பனையாளர்களும், 100 அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர்களும், 96 விற்பனைக்கு பிந்தைய பழுதுபார்க்கும் மையங்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.