பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » சினிமா செய்திகள் » பிரபல நடிகருக்காக ஒன்றிணையும் ஏ.ஆர்.ரகுமான், தனுஷ்
005

பிரபல நடிகருக்காக ஒன்றிணையும் ஏ.ஆர்.ரகுமான், தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது தனது கவனத்தை ஹாலிவுட் பக்கம் திருப்பி இருக்கிறார். டிராப் சிட்டி என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். மேலும் கோட் நைட்ஸ் என்ற ஹாலிவுட் ஆல்பத்தையும் தயாரித்துள்ளார்.

இந்த ஆல்பத்தில் ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷின் இந்த ஹாலிவுட் பாடலை ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தனுஷ் இணைந்து 17-ம் தேதி வெளியிடவுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் ஜி.வி.பிரகாஷுக்காக ஒன்றிணைகிறார்கள்.

இந்தப் பாடல் ஜிவி.பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்