Templates by BIGtheme NET
Tendulkar-briefs-PM-Modi-about-Sachin-A-Billion-Dreams

பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சந்திப்பு

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கர் இன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை நிகழ்வை அடிப்படையாக கொண்ட ”சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்” திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், பிரதமரின் வாழ்த்தை பெற்றதாகவும், இந்தப்படம் குறித்து பிரதமரிடம் பேசியதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். மேலும், ஊக்கமளிக்கும் வகையில் பேசிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெண்டுல்கர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் வாழ்க்கை படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையை கொண்ட இந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ பெயரில் திரைப்படமாக வருகின்ற இந்த படம் மே 26-ம் தேதி வெளிவர உள்ளது. தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*