Templates by BIGtheme NET
transfer

பிஆர்ஒவை தொடர்ந்து ஏபிஆர்ஒவும் இடமாற்றம்

நாகர்கோவில், ஜன. 12: குமரி மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலராக பதவி வகித்து வந்த காந்தி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் செய்தி, மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய கலையரசன் குமரி மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 8ம் தேதி நாகர்கோவிலில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.இந்தநிலையில் குமரி மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த செய்யது முகம்மது தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்பு வேளையில் இவரது செயல்பாடுகள் சில சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த இடமாற்றம் நடைபெற்றதாக செய்தி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.