Templates by BIGtheme NET
Google Logo

பாரத் மேட்ரிமோனி தொடர்ந்த வழக்கில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.136 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.136 கோடி அபராதம் விதித்துள்ளது. இணைய தேடுதல் மற்றும் விளம்பரங்களைத் தேடுவதில் பாரபட்சமாக நடந்து கொண்டதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷியாவில் கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையமும் கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தில் 190 பக்க உத்தரவில், இணையத்தில் தேடுவதில் மூன்று அடிப்படையில் முன்னுரிமை அளித்து கூகுள் நிறுவனம் பாரபட்சமாக நடந்து கொண்டதை உறுதி செய்துள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தின் சராசரியில் 5 சதவீத தொகை ரூ.135.85 கோடியை அபராதமாக விதித்துள்ளது. 60 நாட்களுக்குள் இந்த தொகையை செலுத்தவும் உத்தவிட்டுள்ளது. இணைய சமவாய்ப்பு சட்டத்தின் கீழ் வருமானத்தில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

கூகுள் தேடுபொறியில் பாரபட்சம் காட்டப்படுவதாக பாரத் மேட்ரிமோனி டாட் கம் நிறுவனம் மற்றும் ஒரு நுகர்வோர் அமைப்பும் 2012-ம் ஆண்டில் புகார் அளித்ததன் அடிப்படையில் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.