Templates by BIGtheme NET
In-PakistanBlasts

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 9 பேர் உடல் சிதறி சாவு

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் தலீபான், அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்தப்பகுதியில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தானின் மிர் அலி நகரில் நேற்று முன்தினம் இரவு ராணுவ வாகனம் சென்றபோது, அதைக் குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை ‘ரிமோட்’ முறையில் பயங்கரவாதிகள் வெடிக்க செய்தனர். பலத்த சத்தத்துடன் அந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இது குறித்து அங்குள்ள போலீஸ் அதிகாரி தாஹிர் கான் கருத்து தெரிவிக்கையில், “வாஜிரிஸ்தானில் மறுபடியும் ரத்தம் கொட்டுகிறது” என்று கூறினார். இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*