Home » உலகச்செய்திகள் » பாகிஸ்தானில்இந்திய படங்களை திரையிட தடை
In-PakistanIndian-films-banned

பாகிஸ்தானில்இந்திய படங்களை திரையிட தடை

இஸ்லாமாபாத்,

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இந்தியாவுடனான தூதரக உறவை துண்டிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்தது. இந்தநிலையில் தற்போது இந்திய படங்களையும் அங்கு திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் கூறுகையில், ‘பாகிஸ்தானில் இந்திய படங்களை திரையிடக்கூடாது. அனைத்து வகையான இந்திய கலாசார நடவடிக்கைகளையும் தடை செய்வதற்கான கொள்கையை அரசாங்கம் வகுத்து வருகிறது’ என்றார்.

இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் மிகவும் பிரபலமாக உள்ளன. அந்த நாட்டில் தியேட்டர்களின் மொத்த வருவாயில் 70 சதவீதம் பாலிவுட் படங்கள் மூலம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.