பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » சற்று முன் » பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியாக உயர்வு
202008070800126751_Water-level-of-Bhavani-Sagar-Dam-rises-to-95-feet_SECVPF

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியாக உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியாக உயர்வுஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக விளங்கி வரும் நீலகிரி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 91 அடியில் இருந்து 95 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 39,617 கனஅடியாக உள்ளது. தொடர்ந்து நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.