Home » சினிமா செய்திகள் » பவன் கல்யாணுடன் முதல்முறையாக ஜோடி சேரும் ராய் லட்சுமி

பவன் கல்யாணுடன் முதல்முறையாக ஜோடி சேரும் ராய் லட்சுமி

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‘கப்பார் சிங்’ படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

‘சர்தார் கப்பார் சிங்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக அனிஷா அம்ரோஸ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சுதந்திர தினத்தன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தில் ராய் லட்சுமியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் பவன் கல்யாண் நடிக்கும் ‘சர்தார் கப்பார் சிங்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறேன். அவருடன் முதன்முறையாக இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடவிருக்கிறேன்.

இது எனக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருக்கிறது. அவருடன் நடனமாடுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இது என்னுடைய ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ராய் லட்சுமி, தெலுங்கில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும், பவன் கல்யாணுடன் இணைவது இதுவே முதல்முறை. இப்படத்தை இயக்குனர் பாபி இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.