Home » குமரி செய்திகள் » பழுதடைந்த ரோடுகள் சீரமைக்க கோரிக்கை
01

பழுதடைந்த ரோடுகள் சீரமைக்க கோரிக்கை

மேக்காமண்டபம் முட்டைக்காடு ரோட்டில் குண்டு குழி ஏற்பட்டதுடன் ரோட்டோரம் சீரமைப்பின்றி இரு சக்கர வாகனங்கள் ஓட்டி செல்ல சிரமமாக இருப்பதால் பழுதடைந்த ரோட்டைவிரைந்து சீரமைக்க வேண்டுமென சுற்று வட்டார மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோதநல்லூர் பஞ்.க்குட்பட்ட மேக்காமண்டபம் முட்டைக்காடு ரோடு ஆங்காங்கே குண்டு குழிகளோடு காட்சி தருகிறது. குறிப்பாக, மேக்காமண்டபம் முஸ்லீம் பள்ளி அருகில், மார்க்கெட் அருகில், செம்பருத்திவிளை, வழிக்கலாம்பாடு கோதநல்லூர் பஞ். அருகில், முட்டைக்காடு வரை குண்டு குழி ஏற்பட்டு இதனால் அடிக்கடி இரு சக்கர வாகன பயணிகள் அடிக்கடி விழுந்து எழுவதை பார்க்க முடிகிறது.

மழை வந்து விட்டால் மேற்படி குறிப்பிட்ட இடங்களில் நீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி தருவதுடன் மேக்காமண்டபம் முஸ்லீம் பள்ளி தொழுகைக்கு செல்பவர்கள், மார்க்கெட் செல்பவர்கள் பேரூராட்சி அலுவகம், போஸ்ட் ஆபீஸ் செல்பவர்கள் உட்பட நடைபயணிகள் ரோட்டில் தேங்கிய மழை நீரால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பல முறை இதுபற்றி கோரிக்கை வைத்தும் சம்பந்தப்பட்ட துறை கண்டு கொள்ளவில்லையென வேதனை தெரிவித்ததுடன், மேக்காமண்டபம் துவங்கி முட்டைக்காடு வரை ஆங்காங்கே ரோட்டோரம் சீரமைப்பின்றி ரோட்டிலிருந்து வாகனங்கள் திடீரென ஓரமாக சென்று விட்டால் விபத்து ஏற்படும் விதமாக காட்சி தருகிறது. மேலும் சமீபத்தில் செம்பருத்திவிளை ஜங்ஷனிலிருந்து மாறாங்கோணம் வரை சூப்பர் ரோடு போட்ட துறை பாதசாரிகள் நடந்து செல்ல போதுமான இட வசதியின்றி அமைத்துள்ளனர். இந்த பகுதி சானல்கரையில் அமைந்துள்ள ரோடு ஆகையால் விரைந்து கட்டி விபத்தை தவிர்க்க நடவடிக்கை தேவையென சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.