Templates by BIGtheme NET
mobile-recharge-deducted-2018

பண தட்டுப்பாட்டால் மொபைல் ரீசார்ஜ் சரிவு

புதுடெல்லி: பணத்தட்டுப்பாடு காரணமாக மொபைல் ரீசார்ஜ் செய்வது 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணத்தட்டுப்பாடு காரணமாக மொபைல் ரீசார்ஜ் செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தும் சந்தாதாரர்களில் சுமார் 95 சதவீதம் பேர் பிரீபெய்டு வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்கள் ரீசார்ஜ் செய்வது தற்போது கணிசமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து மொபைல் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாவது: 2016ம் ஆண்டு பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு இதுபோன்ற நிலை ஏற்பட்டது. டீலர்கள் மூலம் ரீசார்ஜ் செய்வது 80 சதவீதம் வரை குறைந்தது. ஆனால் தற்போது அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை. சராசரியாக 5 முதல் 10 சதவீதம் பிரீபெய்டு ரீசார்ஜ் குறைந்துள்ளது. புறநகர் பகுதிகள், கிராமங்களில் பலர் கடைகள், ஏஜென்ட்களிடம்தான் ரீசார்ஜ் செய்கின்றனர். நகரங்களில் கூட ஒரு சிலர் கடைகளில் ரீசார்ஜ் செய்கின்றனர். ஆனால் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்வது தற்போது அதிகமாகியுள்ளதால் பாதிப்பு இந்த முறை குறைந்துள்ளது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.