Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » பஜாஜ் ஆட்டோ விற்பனை 18% உயர்வு
bajaj-business

பஜாஜ் ஆட்டோ விற்பனை 18% உயர்வு

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மார்ச் மாத வாகன விற்பனை 18 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பஜாஜ் ஆட்டோ மார்ச் மாதத்தில் 3,23,538 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் விற்பனையான 2,69,939 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீத வளர்ச்சியாகும்.
நிறுவனத்தின் மொத்த வர்த்தக வாகனங்கள் விற்பனை 64,409-லிருந்து 8 சதவீதம் அதிகரித்து 69,813-ஆக இருந்தது.

ஏற்றுமதி 1,30,748 வாகனங்களிலிருந்து 3 சதவீதம் அதிகரித்து 1,34,166-ஆக காணப்பட்டது.
மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டில் மொத்த வாகன விற்பனை 40,06,791 என்ற எண்ணிக்கையிலிருந்து 25 சதவீதம் அதிகரித்து 50,19,503-ஆக இருந்தது என பஜாஜ் ஆட்டோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.