Home » சற்று முன் » நெல்லையில் முகமூடிக் கொள்ளையர்களை துணிச்சலுடன் அடித்து விரட்டிய வயதான தம்பதியினர் 40 கிராம் செயின் பறிப்பு
Older-couple-stoped-robbery-attempted-Tirunelveli

நெல்லையில் முகமூடிக் கொள்ளையர்களை துணிச்சலுடன் அடித்து விரட்டிய வயதான தம்பதியினர் 40 கிராம் செயின் பறிப்பு

கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த சண்முகவேல் (70), அவருடைய மனைவி செந்தாமரை (65) தென்னந்தோப்பில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுடைய பிள்ளைகள் வெளியூர்களில் உள்ளனர். சண்முகவேலும், செந்தாமரையும் அங்கு வசித்து வந்துள்ளனர். நேற்றிரவு வீட்டின் முற்றத்தில் சண்முகவேலு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது இருகொள்ளையர்கள் கொள்ளையடிக்க நுழைந்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த 2 கொள்ளையர்கள், சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கியுள்ளான். ஒரு திருடன் இறுக்கிய நிலையில் மற்றொருவன் வந்துள்ளான். அப்போது அவர் கூச்சலிட்டுள்ளார். மற்றொரு திருடனை கால்களால் எட்டி உதைத்துள்ளார்.

இதற்கிடையே அவருடையை மனைவி வெளியே வந்ததும் செருப்பு, நாற்காலி, உள்ளிட்டவற்றை தூக்கி எறிந்தார். கொள்ளையர்களை விரட்ட முயன்றார். அப்போது திருடர்களின் பிடியிலிருந்து சண்முகவேலு விலகினார். உடனடியாக அவரும் கொள்ளையர்களுடன் சண்டையிட்டார். இருவரும் கையில் கிடைத்த பொருட்களை தூக்கிவீசி கொள்ளையர்களை விரட்ட முயன்றனர். செந்தாமரை அணிந்திருந்த 40 கிராம் நகையை திருடர்கள் பறித்துவிட்டனர். இதை தடுக்க முயன்றபோது, செந்தாமரையின் கையில் அந்த நபர் அரிவாளால் வெட்டினார். இருப்பினும் செந்தாமரை துணிச்சலுடன் போராடினார். இறுதியில் இருவரும் துணிந்து போராடி, முகமூடிக் கொள்ளையர்களை விரட்டினர். இதுதொடர்பாக வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கடையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டனர். கொள்ளை சம்பவம் சண்முகவேல் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ பதிவுகளை கொண்டு கொள்ளையர்கள் யாரென அடையாளம் காண போலீஸ் விசாரிக்கிறது. இப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொள்கின்றனர், முழு ஒத்துழைப்பும் அவர்கள் தரப்பில் வழங்கப்படுகிறது என தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.