Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்க வலியுறுத்தல்
Neet-Exam-Training-Center

நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்க வலியுறுத்தல்

கருங்கல், பிப்.14:தமிழக அரசின் உத்தரவு படி கிள்ளியூர் ஒன்றியத்தில் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கிள்ளியூர் வட்டாரக்குழு உறுப்பினர் சாந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வை கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் கல்வித்துறை சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் நீட் மற்றும் அனைத்து அரசு தேர்வுகளுக்கான பயிற்சி மையம், பிப்ரவரி மாதம் முதல் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் இதுவரை கிள்ளியூர் வட்டார பகுதிகளில் நீட் பயிற்சி மையம் அமைக்க படவில்லை. இது மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
நீட் தேர்வு மையம் அமைக்க கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டடவசதி உட்பட பொருத்தமான இடவசதி உள்ளது. எனவே காலதாமதம் செய்யாமல் கிள்ளியூர் வட்டார ஏழைஎளிய மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நீட் தேர்வு பயிற்சி மையம் கருங்கலில் அமைத்திட தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வேண்டுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துல்ளார்.