Templates by BIGtheme NET
fire-accident

நித்திரவிளை அருகே வீடு எரிந்து சாம்பல்

நித்திரவிளை, ஜன. 12: நித்திரவிளை அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் 16 பவுன் நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மைதீன்கண்(37). சமையல்காரர். இவரது மனைவி ஜாஸ்மின். தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான ஓலை குடிசையில் வசித்து வந்தனர். கடந்த 2 நாட்களாக வீட்டின் தரைதளத்துக்கு சிமென்ட் போடும் பணி நடந்தது.

இதனால் மைதீன்கண் மனைவி, பிள்ளைகளுடன் அருகில் உள்ள குடும்ப வீட்டில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்தார். இந்த நிலையில் ேநற்று அதிகாலை அவரது ஓலை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தகவல் அறிந்ததும் மைதீன்கண் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார். தொடர்ந்து கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த 16 பவுன் நகை, ₹20 ஆயிரம், துணிமணிகள், ரேஷன், ஆதார், பான் கார்டு, பிள்ளைகளின் புத்தகம், கட்டில், பீரோ, வாசிங் மிஷன் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. தீயில் எரிந்து சாம்பலான பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து நித்திரவிளை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.