Templates by BIGtheme NET
Rahul-Gandhi-replied-to-BJP

நான் சாதாரண மனிதன்; தவறு செய்வது இயல்பு பா.ஜனதாவுக்கு ராகுல் காந்தி பதில்

புதுடெல்லி,

குஜராத் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘டுவிட்டரில்’ தினந்தோறும் கேள்வி கேட்கப்போவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அறிவித்து இருந்தார். அதன்படி, அவர் குஜராத் விலைவாசி உயர்வு குறித்து நேற்று முன்தினம் எழுப்பிய கேள்வியில், தவறான புள்ளி விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இதை பா.ஜனதா சுட்டிக்காட்டி விமர்சித்தது.

இந்நிலையில், அதற்கு ராகுல் காந்தி நேற்று பதில் அளித்தார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

என்னுடைய பா.ஜனதா நண்பர்கள் கவனத்துக்கு.. நான் நரேந்திர மோடி போல் அல்லாமல், சாதாரண மனிதன். நாங்கள் தவறு செய்வது இயல்பு. அதுதான் வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகிறது. தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. அதை தொடர்ந்து செய்யுங்கள். அப்போதுதான் என்னை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*