Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி: ப.சிதம்பரம் 27-ந் தேதி மும்பை வருகிறார்
Preparation-of-the-parliamentary-election-report

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி: ப.சிதம்பரம் 27-ந் தேதி மும்பை வருகிறார்

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக இந்த குழு நாடு முழுவதும் பல்வேறு முக்கிய துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற 27-ந் தேதி ப.சிதம்பரம் தலைமையிலான குழு மும்பைக்கு வர உள்ளது. இந்த குழுவினர் இங்குள்ள தொழில் துறை, வர்த்தகத்துறை, வங்கித்துறை மற்றும் முதலீட்டாளர்கள் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த தகவலை மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்தார்.