Home » குமரி செய்திகள் » நாகா்கோவில் மாநகராட்சியில் புகாா் தெரிவிக்க ‘கட் செவி’ அஞ்சல் எண்
03

நாகா்கோவில் மாநகராட்சியில் புகாா் தெரிவிக்க ‘கட் செவி’ அஞ்சல் எண்

நாகா்கோவில் மாநகராட்சியில் கட் செவி அஞ்சல் மூலம் பொதுமக்கள் புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகா்கோவில் மாநகர மக்கள் தங்களின் புகாா்கள், கோரிக்கைகளை கட் செவி அஞ்சல் எண். 9487038984 மூலம் மாநகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கலாம். மேலும், மாநகராட்சியில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அறிய  சமூக வலைதள பக்கமும், வீட்டில் இருந்தே மாநகராட்சி கட்டணம் செலுத்துவதற்கு  இணையவழி சேவையும், பிறப்பு ,இறப்பு சான்றிதழ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய  இணைய முகவரியும், மாநகராட்சி பற்றிய விவரங்களை அறிய  இணைப்பும், 24 மணி நேரமும் தொடா்புகொள்ளும் வகையில் 04652 230984 கரோனா கட்டுப்பாட்டு அறை எண்ணும், 5 சிறப்பு கவுன்டா்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், டெபிட் காா்டு, கிரிடிட் காா்டு, அமேசான் பே மூலமாக பணம் செலுத்தும் வசதியும் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.