Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » நாகர்கோவில் நகரில் மேலும் 250 கண்காணிப்பு கேமராக்கள்
More-than-250-surveillance-cameras-in-Nagercoil

நாகர்கோவில் நகரில் மேலும் 250 கண்காணிப்பு கேமராக்கள்

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. நாகர்கோவில் நகர பகுதியை பொறுத்தவரை வடசேரி, மீனாட்சிபுரம் மற்றும் அண்ணா பஸ் நிலையங்கள் உள்பட முக்கிய பகுதிகளில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் நகர பகுதிகளில் மேலும் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடக்கின்றன.

எஸ்பி அலுவலக சாலையில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. எஸ்.பி. அலுவலகத்துக்கு வெளியே உள்ள சாலையை முழுமையாக கண்காணிக்கும் வகையில் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதே போல் கோர்ட் ரோடு, டதி ஸ்கூல் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, டெரிக் சந்திப்பு, பார்வதிபுரம், ராமன்புதூர் உள்ளிட்ட இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. குறித்து போலீசார் கூறுகையில், புதியகேமராக்கள்அனைத்தும்வயர்லெஸ்சிஸ்டத்தில்இயங்குபவை. இவற்றுக்கானகட்டுப்பாட்டுஅறைஎஸ்.பி. அலுவலகத்தில்செயல்படும். இரவு நேரங்களிலும் துல்லியமாக பதிவு செய்யும் இந்த கேமராக்கள் கடும் இருளிலும் வாகன எண்களை படம்பிடிக்கும் திறன் கொண்டவைஎன்றனர்.