Templates by BIGtheme NET
nagercoil-water-Refineries

நாகர்கோவில் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் விஜயகுமார் எம்.பி ஆய்வு

நாகர்கோவில், மார்ச் 12: நாகர்கோவில் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை விஜயகுமார் எம்.பி நேற்று ஆய்வு செய்தார். நாகர்கோவில் நகராட்சிக்கு பூதப்பாண்டி அருகே முக்கடல் அணையிலிருந்து குடிநீர் பெறப்பட்டு வருகிறது. 1942ம் ஆண்டு நாகர்கோவில் நகராட்சியின் குடிநீர் தேவைக்காக சித்திரை திருநாள் மார்த்தாண்ட வர்மாவால் அணை கட்டப்பட்டு 1945ல் பயன்பாட்டிற்கு வந்தது. அப்போது 35 ஆயிரம் மக்கள்தொகையை கணக்கில் கொண்டு இந்த முக்கடல் அணை மைனஸ் மட்டத்தில் 20 அடியும், பிளஸ் மட்டத்தில் 25 அடியிலும் கட்டப்பட்டது. இங்கிருந்து கிருஷ்ணன்கோயிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப தற்போது 3 குழாய் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது. என்றாலும் குடிநீர் தேவை அதிகரிப்பு காரணமாக 24 மணி நேர குடிநீர் விநியோகம் சுழற்சி முறையில் விடும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

நாகர்கோவில் நகராட்சியில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி 2 லட்சத்து 60 ஆயிரத்து 70 பேர் உள்ளனர். மேலும் நகராட்சி எல்லையும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து வந்து செல்வோர் உட்பட 3.50 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி தேவையாக உள்ளது. நாகர்கோவில் நகராட்சி கிருஷ்ணன்கோவிலில் மூன்று குடிநீர் சுத்திகரிப்பு பிரிவுகள் உள்ளன. இவற்றின் வாயிலாக 2 கோடியே 10 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கும் திறன் உள்ளது.

இதில் பழைய 2 பிரிவுகளை அகற்றிவிட்டு புதிதாக 3 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கும் வகையில் புதிய யூனிட் அமைக்கப்பட இருக்கிறது. நகராட்சி குடிநீர் திட்ட மேம்பாட்டு திட்டங்களுக்கு ₹270 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் ஒருபகுதியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கிருஷ்ணன்கோவில் பில்டர் ஹவுஸ் வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை விஜயகுமார் எம்.பி நேற்று காலையில் பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தார். மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், அதிமுக நகர செயலாளர் சந்திரன், தியாகராஜன், சிவா மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.