Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத என்ட் டூ என்ட் பஸ்கள் பஸ் நிலையத்திலேயே டிக்கெட் வினியோகம்
Nagercoil-Tirunelveli-bus-stop-end-to-end

நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத என்ட் டூ என்ட் பஸ்கள் பஸ் நிலையத்திலேயே டிக்கெட் வினியோகம்

நாகர்கோவில், ஜூன் 13: நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத என்ட் டூ என்ட் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் புதிய பஸ்கள் விடப்பட உள்ளன. இந்த பஸ்கள் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இருப்பிடத்தை கண்டறியும் குளோபல் பொஷிசனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்), வேக கட்டுப்பாட்டு கருவி, கேமரா உள்ளிட்டவற்றுடன் இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் பயணிகள் அமருவதற்கு வசதியாக சீட் வடிவமைப்புகள், அவசர கால வழி உள்ளிட்டவையும் உள்ளன. அவசர கால வழி அமைந்துள்ள பகுதியில் இருக்கைகள் இருக்காது. மேலும் லக்கேஜ் வைப்பதற்காக தனி கேபின் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது.

டிரைவர் இருக்கை அருகே போதிய காற்றோட்டத்திற்கு மின் விசிறி, விபத்துக்களை தவிர்க்கும் வகையிலும், முன் செல்கிற வாகனங்களில் மோதுவதை தவிர்க்கும் வகையில் தானியங்கி, ‘பிரேக்’ வசதி ஆகியவையும் உண்டு. டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்து ஓட்டினாலோ, டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து பஸ் விலகி ஓடினால் எச்சரிக்கை செய்யும் ‘அலாரம்’ அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக தானியங்கி கதவுகள், ‘ரிவர்ஸ் கேமரா’ அமைப்பும் இடம் பெற்றுள்ளது. சீட் எண்ணிக்கை 57ல் இருந்து 52 ஆக குறைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்துக்கு மொத்தம் 52 பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவற்றில் 44 பஸ்களுக்கு பாடிகட்டும் பணிகள் நடைபெற்றன. இதில் முதற்கட்டமாக 4 பஸ்கள் நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 5 புதிய பஸ்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் வர உள்ளன. இவ்வாறு வரக்கூடிய நவீன ரக பஸ்களை கண்டக்டர் இல்லாத பேருந்துகளாக இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.