Templates by BIGtheme NET
nagercoil-wineshop-fire

நாகர்கோவில் ஒர்க்ஷாப்பில் தீ விபத்து போலீசார் விசாரணை

நாகர்கோவில், பிப்.12: நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் உள்ள பிருந்தாவன் காலனியில் கார் பெயிண்டிங்க் ஆலை மற்றும் ஒர்க்ஷாப் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை இங்கு வழக்கம்போல் ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த ஷெட்டின் உள்பகுதியில் தீப்பிடித்து கரும்புகை வர ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர் ஆனால் முடியவில்லை.

இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு பெனட் தம்பி தலைமையிலான அலுவலர்கள் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் ஏராளமான கார் உதிரி பாகங்கள் மற்றும் உபகரணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது. ஆனால் தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.