Templates by BIGtheme NET
Nagarcoil-Voter-Card-Printing-Issue-How-did-the-Coimbatore-computer-center-owner-enter-the-inquiry-into-the-Election-Commission's-web-site?

நாகர்கோவிலில் வாக்காளர் அட்டை அச்சடிப்பு விவகாரம் கோவை கணினி மைய உரிமையாளரிடம் தனிப்படை விசாரணை தேர்தல் ஆணைய வெப்சைட்டுக்குள் நுழைந்தது எப்படி?

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் போலியாக வாக்காளர் அட்டை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்த விவகாரத்தில் கோவையை சேர்ந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரை போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். நாகர்கோவில் கோட்டார் – ஈத்தாமொழி சந்திப்பில் செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் சென்டரில், அனுமதியின்றி போலியாக வாக்காளர் அடையாள அட்டை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுப்பதாக கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரேவுக்கு தகவல் வந்தது. இதன் பேரில் தேர்தல் அதிகாரிகள், கோட்டார் காவல் துறையினர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் சென்டரில் சோதனை செய்தனர். அப்போது அங்கு போலியாக வண்ண வாக்காளர் அடையாள அட்டை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்தது உறுதியானது. இதையடுத்து கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் தேரேகால்புதூரை சேர்ந்த செந்தில்குமார் (50), பணியாளர் சுபாஷ் (23) ஆகியோரை கோட்டார் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து பெயர் அச்சிடப்படாத 900 வண்ண வாக்காளர் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இ சேவை மையத்துக்கான அனுமதி இன்னும் கிடைக்காத நிலையில் செந்தில்குமார் இ சேவை மையம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக செந்தில்குமாரிடம் விசாரணை நடத்திய போது, கோவையில் இருந்து வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்றை நண்பர் அனுப்பி இருந்தார். அந்த வாட்ஸ் அப் மெசேஜில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு எனது மையத்தில் இருந்தும் வாக்காளர் அட்டை திருத்த ஏற்பாடுகளை செய்யுமாறு கூறினேன்.

அதன்படி திருத்தம் மற்றும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படுகிறவர்களின் முகவரிகள், வாக்காளர் அட்டை எண் போன்றவற்றை அந்த நம்பருக்கு அனுப்பி வைத்து, அதன் மூலம் திருத்தம் மற்றும் பிரிண்ட் அவுட் தயாரிக்கப்பட்டு வண்ண அட்டை எடுத்து கொடுத்தேன். இதுவரை இரண்டு பேருக்கு மட்டுமே எடுத்துக் கொடுத்துள்ளேன். தேர்தல் ஆணைய கட்டுப்பாடு உள்ளது என்பது எனக்கு தெரியாது. யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று கருதி தான் எடுத்து கொடுத்தேன் என்றார். இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணின் முகவரியை கண்டுபிடித்து கோவைக்கு விரைந்தனர். கோவை போலீசார் உதவியுடன், கோவையில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரை பிடித்து நாகர்கோவில் அழைத்து வந்தனர். அவர் இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளார். இருப்பினும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. செந்தில்குமாரும், அந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரும் செல்போனில் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே கோவை கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினால் இது தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் கூறி உள்ளனர். இதற்கிடையே தேர்தல் ஆணைய இணைய தள முகவரிக்குள் நுழைய ரகசிய குறியீடு எண் உள்ளது. அரசின் இ சேவை மையங்களில் மட்டுமே இதில் திருத்தங்கள் மேற்கொண்டு வண்ண வாக்காளர் அட்டை எடுக்க முடியும். இந்த நிலையில் இவர்கள் தேர்தல் கமிஷன் இணைய தள முகவரிக்குள் நுழைந்தது எப்படி? என கேள்வி எழுந்துள்ளது. அதிகாரிகள் உதவி இல்லாமல் ரகசிய குறியீட்டை பெற முடியாது. எனவே தொடர்ந்து விசாரணை நடத்தினால் அதிகாரிகளும் சிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.