சற்று முன்
Home » கன்னியாகுமரி செய்திகள் » நாகர்கோவிலில் இன்று காய்கறி விலை குறைந்தது
Vegetables-price-least-in-Nagercoil

நாகர்கோவிலில் இன்று காய்கறி விலை குறைந்தது

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.

வழக்கமாக செப்டம்பர் மாதம் தொடங்கியதும் காய்கறிகளின் விலை உயர்வது வழக்கம். இந்த கால கட்டத்தில் சுபமுகூர்த்தம், கோவில் விழாக்கள் காரணமாக காய்கறிகளின் விலை உயரும்.

மேலும் கேரளாவில் ஓணப்பண்டிகை தொடங்குவதாலும் காய்கறிகளின் விலை அதிகரிக்கும். குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லையில் இருந்தும் ஏராளமான காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதால் இங்கு காய்கறிகளின் விலை சற்று உயரும்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட காய்கறிகளின் விலை குறைந்தே காணப்பட்டது. கடந்த வாரம் சற்று உயர்ந்திருந்த காய்கறிகளின் விலை இந்த வாரம் தொடங்கியது முதல் குறைய தொடங்கியது.

நாட்டு தக்காளி கடந்த வாரம் வரை கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆனது. இதுபோல ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை அனது.

இன்று நாட்டு தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.10 ஆக குறைந்தது. இது எதிர்பாராத வீழ்ச்சி என்று கூறப்பட்டது. இதுபோல ஆப்பிள் தக்காளியின் விலையும் கிலோவுக்கு ரூ.15 ஆக குறைந்தது. தக்காளியை போல மற்ற காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ.2 வரை குறைந்தது. இதற்கு சமீபத்தில் பெய்த மழையே காரணம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

நாகர்கோவில் வடசேரி மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் விலை விபரம் வருமாறு:-

கத்தரிக்காய்- கிலோ ரூ.43, நாட்டு கத்தரிக்காய்- ரூ. 60, முட்டைகோஸ்- ரூ.80, பீட்ரூட்- ரூ.25, கேரட்- ரூ. 60, பீன்ஸ் – ரூ.90, வெண்டைக்காய்- ரூ.35, உருளைக்கிழங்கு -ரூ.26, பல்லாரி – ரூ.35, இஞ்சி புதிது – ரூ.100, இஞ்சி பழையது – ரூ.200, சீனியவரைக்காய் – ரூ. 28, கோழி அவரைக்காய்- ரூ.35, பாகற்காய்- ரூ.35, கோவக்காய்- ரூ. 35, புடலைங்காய் – ரூ.30, பூசணி – ரூ.12, முருங்கைக்காய்- ரூ.40, மாங்காய் – ரூ.70, தடியங்காய்- ரூ.25.

குமரி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை குறைந்திருப்பது பற்றி வியாபாரிகள் கூறியதாவது:-

நாகர்கோவில் காய்கறி மார்க்கெட்டில் தற்போது காய்கறிகளின் விலை சற்று குறைந்து உள்ளது. இந்த விலையே அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும்.

ஓணப்பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. என்றாலும் இனி காய்கறிகளின் விலை உயர வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.