Home » கன்னியாகுமரி செய்திகள் » நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வெற்றியை ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வெற்றியை ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

 நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வெற்றியை ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில்
கன்னியாகுமரி தொகுதி வெற்றியை ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க வேண்டும்
அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

நாகர்கோவில், ஜன.7-

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வெற்றியை ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் சம்பந்தமான குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் சதாசிவம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜன் வரவேற்று பேசினார்.

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டிபச்சைமால் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் பணிகள்

அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் நல்லாட்சியாலும், அவரால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புத் திட்டங்களினாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவரது சரித்திர சாதனைத் திட்டங்கள் தங்களுக்கும் கிடைக்காதா? என்று இந்தியாவின் பிறமாநில மக்களும் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கட்சி நிர்வாகிகளாகிய நீங்கள் அனைத்து அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புத்திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

வருகிற பிப்ரவரி மாத இறுதியில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். எனவே பாராளுமன்ற தொகுதி தேர்தல் வேலைகளை நாளையில் இருந்தே தொடங்கிட வேண்டும். இந்த வேலையை மாவட்ட செயலாளர்தான் செய்வார், ஒன்றிய செயலாளர்தான் செய்வார் என்று இருக்கக் கூடாது. மாவட்ட நிர்வாகிகளுக்கும், அனைத்து அணிகளின் நிர்வாகிகளுக்கும் தேர்தல் பணியில் பங்கு இருக்கிறது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு, கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.பச்சைமால் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

66 பேர் ரத்ததானம்

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க.வை வெற்றிபெறச்செய்து, அந்த வெற்றியை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பிப்பது. அவர் சுட்டிக்காட்டும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய பிரசார பணிகளை முழுவீச்சில் தீவிரப்படுத்துவது. வருகிற 17-ந் தேதி எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை மிகவும் சிறப்பாக நடத்துவது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 66-வது பிறந்தநாள் விழாவை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வெகுவிமரிசையாக நடத்திடவும், நாகர்கோவில் நாகராஜா கோவில், கோட்டார் புனித சவேரியார் கோவில், வடசேரி தர்கா ஆகியவற்றில் மும்மத பிரார்த்தனை நடத்துவது, அன்றைய தினமே 66 பேர் ரத்த தானம் செய்வது, பொதுக்கூட்டங்கள் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் வக்கீல் ஞானசேகர் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், காரவிளை செல்வன், மனோகரன், ஜெயசீலன், ஜெயச்சந்திரன் சந்துரு, கோலப்பன், பாலஜனாதிபதி, டாரதி சாம்சன், கோலப்பன், தாணுப்பிள்ளை, அழகேசன், எட்வின்ராஜ், பள்ளவிளை ராஜேஷ், இ.என்.சங்கர், கே.சி.யூ.மணி, தம்பித்தங்கம், ராமகிருஷ்ணன், அசோக்குமார், மத்தியாஸ், கிருஷ்ணகுமார், நவமணி, சுகுமாரன், ஆறுமுக ராஜா, அக்ஷயா கண்ணன், ரவீந்திரன், ராஜாராம், மோகன்தாஸ், அருள்தாஸ், ஜெயசிங், வக்கீல் விக்னேஷ், ராயல் ராபின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.