Home » சினிமா செய்திகள் » நடிகர் விஜயின் மாஸ்டர் டிரைலர் மரண மாஸாக இருக்கும் – நடிகர் அர்ஜூன் தாஸ்
image 24

நடிகர் விஜயின் மாஸ்டர் டிரைலர் மரண மாஸாக இருக்கும் – நடிகர் அர்ஜூன் தாஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்பட பலர் இதில் நடித்து உள்ளனர் . சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஏப்ரல் 9-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரீலிஸ் ஆகவில்லை. மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் மே 12-ம் தேதி முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ள அர்ஜூன் தாஸ் இணையத்தில் நேரலையில் பேசினார். அப்போது மாஸ்டர் படத்தின் டிரைலர் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் மாஸ்டர் டிரைலரை கிட்டத்தட்ட 6 முறை பார்த்துவிட்டேன். டிரைலர் மரண மாஸாக இருக்கு. டிரைலர் எப்போது வெளியாகும் என தெரியவில்லை. ரிலீஸ் தேதி உறுதியான பிறகு தான் அது வெளியாகும்.

மேலும் சரியான நேரத்தில் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக டிரைலரை வெளியிடுவார். படத்தின் டிரைலரில் விஜய் சாரின் அந்த ஒரு டயலாக் வெறித்தனமாக இருக்கும் என கூறினார்.

நடிகர் விஜயின் மாஸ்டர் டிரைலர் மரண மாஸாக இருக்கும் – நடிகர் அர்ஜூன் தாஸ் நடிகர் விஜயின் மாஸ்டர் டிரைலர் மரண மாஸாக இருக்கும் என நடிகர் அர்ஜூன் தாஸ் கூறி உள்ளார். சென்னை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்பட பலர் இதில் நடித்து உள்ளனர் . சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏப்ரல் 9-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரீலிஸ் ஆகவில்லை. மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் மே 12-ம் தேதி முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ள அர்ஜூன் தாஸ் இணையத்தில் நேரலையில் பேசினார். அப்போது மாஸ்டர் படத்தின் டிரைலர் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் மாஸ்டர் டிரைலரை கிட்டத்தட்ட 6 முறை பார்த்துவிட்டேன். டிரைலர் மரண மாஸாக இருக்கு. டிரைலர் எப்போது வெளியாகும் என தெரியவில்லை. ரிலீஸ் தேதி உறுதியான பிறகு தான் அது வெளியாகும். மேலும் சரியான நேரத்தில் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக டிரைலரை வெளியிடுவார். படத்தின் டிரைலரில் விஜய் சாரின் அந்த ஒரு டயலாக் வெறித்தனமாக இருக்கும் என கூறினார்.