Home » இந்தியா செய்திகள் » தொற்றுநோய்க்கு மத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தேவையில்லை – ராஜ்தாக்கரே
nat4

தொற்றுநோய்க்கு மத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தேவையில்லை – ராஜ்தாக்கரே

மும்பை,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தேவையில்லை என மராட்டிய நிவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

மக்கள் இப்போது வேறுபட்ட மனநிலையில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பூமி பூஜை தேவையில்லை. தற்போதைய நிலைமை இயல்புக்கு திரும்பியதும் 2 மாதங்களுக்கு பிறகு இதை நடத்தியிருக்கலாம். அப்படி இருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள அச்சத்தில் இருந்து மக்கள் வெளியேற உதவுவது முக்கியம். இங்கு மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், தொலைக்காட்சி சேனல்களில் வரும் செய்திகள் மற்றும் வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் அனைத்தும் குழப்பத்திற்கு வழிவகுக்கின்றன. மக்கள் நிம்மதியாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை மீட்க அரசு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.