Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » தேசிய இளைஞர் தினத்தில் விவேகானந்தரை வணங்குகிறேன்: மோடி
Modi-bow-to-Swami-Vivekananda-on-his-Jayanti

தேசிய இளைஞர் தினத்தில் விவேகானந்தரை வணங்குகிறேன்: மோடி

புதுடெல்லி:

இளைஞர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தவர் சுவாமி விவேகானந்தர். “நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள், இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்” என்று கூறிய அவரது பிறந்த தினமான ஜனவரி 12-ம் தேதி நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய அரசு இதற்காக அறிவிப்பினை 1984-ம் ஆண்டு வெளியிட்டது. 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் தேதியன்று தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டுகிறது.

அவ்வகையில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைவர்கள் விவேகானந்தருக்கு மரியாதை செலுத்தி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இளைஞர் தினத்தையொட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘இன்றைய தினம் நாம் அனைவரும் சுவாமி விவேகானந்தரை நினைவுகூரவேண்டும். அவர் போற்றத்தக்க ஒரு அறிஞர், துறவி மற்றும் தேசத்தை உருவாக்கியவர். தேசிய இளைஞர் தின வாழ்த்துக்கள்’ என அவர் டுவிட் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி வணங்கினார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். தேசிய இளைஞர் தினமான இன்று, புதிய இந்தியாவை கட்டமைக்கும் இளைஞர்களின் ஆற்றல் மற்றும் உற்சாகத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன்’ என கூறியுள்ளார். #NationalYouthDay #SwamiVivekananda #Modi #tamilnews