Home » கன்னியாகுமரி செய்திகள் » தேங்காப்பட்டணத்தில் மீன்பிடிக்க சென்ற போது மணல் திட்டில் சிக்கிய விசைப்படகு;மீனவர்கள் போராடி மீட்டனர்

தேங்காப்பட்டணத்தில் மீன்பிடிக்க சென்ற போது மணல் திட்டில் சிக்கிய விசைப்படகு;மீனவர்கள் போராடி மீட்டனர்


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் தூத்தூர் பகுதியை சேர்ந்த டைட்டஸ் என்பவரது விசைப்படகில் 12 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். அந்த படகு முகத்துவாரம் பகுதியில் சென்ற போது மணல் திட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்களால் அந்த படகை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இதையடுத்து மீனவர்கள் படகை கயிறு கட்டி இழுத்து கரையோரம் ஒதுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி படகை மீட்டு பாதுகாப்பான இடத்தில் ஒதுக்கி நிறுத்தினர்.

இதுதொடர்பாக மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி கூறும்போது, தேங்காப்பட்டணம் துறைமுகம் முகத்துவார பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு துறைமுக முகத்துவார பகுதியில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி சீரமைப்பு பணியை உடனே தொடங்க வேண்டும் என்றார்.


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65