Home » விளையாட்டுச்செய்திகள் » தென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி
The-South-Zone

தென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி

சென்னை,

செயின்ட் பால்ஸ் மற்றும் ஒய்.எம்.சி.ஏ. மெட்ராஸ் சார்பில் தென் மண்டல ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் வருமான வரி அணி 4-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு சப்-ஜூனியர் அணியை தோற்கடித்தது. இந்தியன் வங்கி-தெற்கு ரெயில்வே அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜி.எஸ்.டி.-செயின்ட் பால்ஸ் (மாலை 3 மணி), லயோலா-டையஸ்(மாலை 4.30 மணி)அணிகள் மோதுகின்றன.