Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » தீபாவளியை முன்னிட்டு தங்கத்தின் விலை அதிகரிப்பு
jewelry

தீபாவளியை முன்னிட்டு தங்கத்தின் விலை அதிகரிப்பு

பண்டிகை தினங்களை முன்னிட்டு தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் ரூ. 32,650-க்கு விற்பனை செய்யப்படுவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதனால் தங்கத்திற்கான தேவை அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளது.

தங்கம், வெள்ளி விலை குறித்து அறிய வேண்டியவை

1. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்து 10 கிராம் தங்கம் ரூ. 32,650-க்கு விற்பனையாகிறது.

2. கடந்த 2012, நவம்பர் மாதத்தின்போது 10 கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ. 32,940-ஆக இருந்தது.

3. டெல்லியில் 99.99 சதவீத தங்கத்தின் விலை ரூ. 32,650-ஆகவும், 99.95 சதவீத சொக்கத் தங்கத்தின் விலை ரூ. 32,500- ஆகவும் உள்ளது.

4. எனினும் 8 கிராம் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ரூ. 24,900-க்கு விற்பனையாகிறது.

5. தொடர்ந்து 2-வது நாளாக தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது. செவ்வாயன்று ரூ. 70 உயர்ந்து 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 32,620-ஆக இருந்தது.

COMMENT
6. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 39,200 -க்கு விற்பனையாகிறது.