Templates by BIGtheme NET
rubber-employees-strike

தீபாவளிக்கு 30 சதவீதம் போனஸ் கேட்டு அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் இன்று ஸ்டிரைக்

குலசேகரம், அக்.12: 20 சதவீதம் போனஸ், 10 சதவீதம் கருணை தொகை என 30 சதவீதம் வழங்க கோரி, குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக ெதாழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அரசுக்கு அதிக வருவாயை ஈட்டி ெகாடுக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று அரசு ரப்பர் கழகம். குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.

இந்தாண்டு 20 சதவீதம் போனஸ் மற்றும் 10 சதவீதம் கருணை தொகை என 30 சதவீதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் சரவணன் தொழிற்சங்கத்தினரிடம் நடத்திய பேச்சு வார்த்தை காரணமாக 6ம் தேதி நடக்க இருந்த போராட்டம் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி தமிழக முதல்வர் தொழிலாளர்களின் போனஸ் விவரம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். இருந்தும் அரசு ரப்பர் கழக அதிகாரிகள் போனஸ் குறித்த எந்த தகவலும் தொழிலாளர்களிடம் தெரிவிக்க வில்லை. ேபானஸ் குறித்த தகவல் கேட்டால் எங்களுக்கு தகவல் வரவில்லை என்று கூறி அனுப்புகின்றனர்.

இதனால் இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்கு குலசேகரத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு தோட்ட தொழிலாளர் சங்க பொதுச்செயலார் வல்சகுமார் தலைமை வகித்தார். தொமுச கூட்டமைப்பை சேர்ந்த விஜயன், சிவநேசன், தொமுச தோட்ட தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த சுகுமாரன், நடராஜன், சிஐடியு தோட்ட தொழிலாளர் சங்க துணை பொதுச்செயலாளர் நடராஜன், செயலாளர்கள் ஆபிரகாம், முத்தம் பெருமாள், மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் ஞானதாஸ், அசோக் குமார், ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சார்பில் பாபு, சோனியா- ராகுல் தொழிலாளர் சங்கம் சார்பில் சந்திரகுமார், வேல்முருகன் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் போனஸ் விவரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும். தீபாவாளிக்கு 20 சதவீத போனஸ் 10 சதவீதம் கருணை தொகை என 30 சதவீதம் வழங்க வலியுறுத்தி 12ம்தேதி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும், இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள அரசு ரப்பர் கழக இயக்குனர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*