Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை ரத்து
Canceling-boat-service-to-Thiruvalluvar-statue

திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை ரத்து

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த காற்றும் வீசுகிறது. கன்னியாகுமரியிலும் இந்த மழை, காற்று நீடிக்கிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கன்னியாகுமரியில் நேற்று திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்க்க முடியாமல் திரும்பினர். அதேவேளை விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை நடந்தது.

மேலும் காலை முதல் மழை பெய்ததால் கொட்டாரம் மற்றும் பழத்தோட்டம் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் பாலம் கட்டுமான பணியிலும் தொய்வு ஏற்பட்டது. பாலப் பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்ல அதன் அருகில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது பெய்து வரும் மழையால் தற்காலிக பாலங்களில் மண் அரிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.