Home » கன்னியாகுமரி செய்திகள் » திருட்டு போன 211 செல்போன்கள் மீட்பு

திருட்டு போன 211 செல்போன்கள் மீட்பு


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

குமரியில் திருட்டு போன 211 செல்போன்கள் மீட்கப்பட்டன. அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஒப்படைத்தார்.

குமரி மாவட்டத்தில் செல்போன்கள் திருட்டு போவதை தடுக்கவும், திருட்டு போன செல்போன்களை மீட்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீஸ் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சைபர் கிரைம் போலீசாரின் பங்களிப்பு முதன்மையானதாக உள்ளது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் தற்போது ரூ.25 லட்சம் மதிப்பிலான 211 செல்போன்கள் மீட்கப்பட்டன. இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை தக்கலை போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். செல்போன்களை மீட்க உரிய நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்ட போலீசாரை சூப்பிரண்டு பாராட்டினர். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த வருடம் மட்டும் இதுவரை ரூ.33 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 322 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தக்கலை போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்வேல்குமார், எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், கணேஷ்குமார், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் முகமது சம்சீர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65