Templates by BIGtheme NET
road-repair-claiming-nagercoil-news

தினகரன் செய்தி எதிரொலி சேதமான சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது

கன்னியாகுமரி, ஏப். 16 தினகரன் செய்தி எதிரொலியால் கன்னியாகுமரி சன் செட் பாயின்டில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.குமரி மாவட்டத்தில் தொடர்ந்து ஆங்காகே இடிமின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழை கன்னியாகுமரியிலும் நீடித்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் இருந்து சன்செட் பாயிண்ட் செல்லும் சாலை சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டது.
கோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில் மாலை நேரங்களில் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் இந்த சாலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளனர். இது குறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டு, சாலையை சீரமைக்க கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. உத்தரவின்பேரில் கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் நேற்று சாலை சேதமான பகுதியை சீரமைக்கும் பணி நடந்தது. லாரிகளில் மண் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டு பணி நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.