Templates by BIGtheme NET
Two-workers-injured-water-tank-steps-broken-near-nagercoil

தாழக்குடி சந்தைவிளையில் குடிநீர் தொட்டியின் படிகள் இடிந்தன: 2 தொழிலாளர்கள் படுகாயம்

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே உள்ள தாழக்குடி பேரூராட்சி சந்தைவிளை பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இன்று காலை வழக்கம்போல இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த வழியாக பள்ளிக்கூடத்திற்கு சென்றனர்.

இந்த பகுதியில் ஒரு மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியும் உள்ளது. இங்கிருந்து இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. சுமார் 150 அடி உயரம் உள்ள இந்த குடிநீர் தொட்டியின் சுழலும் படிக்கட்டுகள் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் காட்சி அளித்தது.

இதைத்தொடர்ந்து இந்த படிக்கட்டுகள் இடிந்து விழுந்து ஆபத்து ஏற்படும் முன்பு உடனே சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து இந்த படிக்கட்டுகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டது. சீரமைப்புப்பணியும் இன்று காலை தொடங்கியது. 4 தொழிலாளர்கள் குடிநீர் தொட்டியின் பழுதடைந்த படிக்கட்டுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று காலை 11.30 மணியளவில் தொழிலாளர்கள் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது திடீரென்று குடிநீர் தொட்டியின் படிக்கட்டுகள் இடிந்து விழுந்தன. அந்த படிக்கட்டுகள் முழுமையாக இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் பயங்கர சத்தம் உருவானது.

மேலும் இந்த இடிபாடுகளில் கண்ணன், நாகராஜன் ஆகிய 2 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதால் அவர்களும் அலறினார்கள்.

குடிநீர் தொட்டியின் படிக்கட்டுகள் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த கண்ணன், நாகராஜன் ஆகிய 2 தொழிலாளர்களையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பூதப்பாண்டி போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பள்ளிக்கூடம் செயல்பட தொடங்கிய பிறகு இந்த குடிநீர் தொட்டியின் படிக்கட்டுகள் இடிந்து விழுந்ததால் மாணவ-மாணவிகள் அசம்பாவிதத்தில் இருந்து தப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.