Templates by BIGtheme NET
Home » உலகச்செய்திகள் » தாய்லாந்து: மீட்கப்பட்ட 8 சிறுவர்களும் நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் உள்ளனர்; பொது சுகாதார அமைச்சகம் தகவல்
Eight-boys-rescued-from-Thai-cave-in-good-mental-state

தாய்லாந்து: மீட்கப்பட்ட 8 சிறுவர்களும் நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் உள்ளனர்; பொது சுகாதார அமைச்சகம் தகவல்

மீசாய்,

தாய்லாந்தின் தாம் லுவாங் குகையை பார்வையிடுவதற்காக சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் அதில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் ஞாயிற்று கிழமை தொடங்கியது. இதில் 4 சிறுவர்கள் முதலில் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று நேற்று மற்றுமொரு 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதனால் மீட்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்தது. இன்னும் 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி நடைபெற உள்ளது.

இதுவரை மீட்கப்பட்ட 8 சிறுவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் நல்ல நிலையில் உள்ளது என பொது சுகாதார அமைச்சகத்தின் நிரந்தர செயலர் ஜெசடா கூறியுள்ளார்.