Templates by BIGtheme NET
worker-death-kanyakumari

தாக்கப்பட்ட தொழிலாளி சாவு 2 பிரண்ட்ஸ் ஆப் போலீசாரிடம் ஏஎஸ்பி மீண்டும் விசாரணை

மார்த்தாண்டம், மார்ச் 12: மார்த்தாண்டத்தில் தாக்கப்பட்ட தொழிலாளி மரணமடைந்தது தொடர்பாக 2 பிரண்ட்ஸ் ஆப் போலீசிடம் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜன்(54). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கழுவன்திட்டை சந்திப்பில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டிருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்த 2 ஆட்டோ டிரைவர்களை தட்டி கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் ராஜனின் கைகளை அடித்து உடைத்தனர்.

படுகாயம் அடைந்தவர் குழித்துறை அருகேயுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இதனிடையே கடந்த 26ம் தேதி மாலை வீட்டின் அருகே நடந்து வந்தபோது திடீரென ராஜன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீசார் தாக்கியதில் ராஜன் உயிரிழந்ததாக குற்றம் சாட்டினர். இச்சம்பவம் தொடர்பாக மணி என்ற சிவகுமார், சஜூ ஆகியோரை பிடித்து தக்கலை ஏஎஸ்பி  அபினவ் விசாரணை நடத்தினார். மேலும் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் அவர்களை காவல்நிலையம் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏஎஸ்பி ஸ்ரீ அபினவ் விசாரணை நடத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.