தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் குறைபாடுகளை 2 வாரத்திற்குள் சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும், இதுதொடர்பாக உரிய விளக்கமளிக்காவிட்டால் அங்கீகார நீட்டிப்பும், மாணவர் சேர்க்கைக்கும் அனுமதியும் வழங்கப்படாது என்றும் அண்ணா பல்லலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகம், 225 கல்லூரிகளில் உரிய உட்கட்டமைப்பு வசதிகள், தகுதியான பேராசிரியர்கள், உரிய கட்டமைப்பு இல்லாததை கண்டறிந்தநிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் நோட்டீஸ்
Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3
Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65