Home » தமிழகச் செய்திகள் » தமிழகத்தில் ரஜினியை வைத்து அரசியல் செய்ய பா.ஜனதா முயற்சி மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா பேட்டி
Keep-Rajini-in-Tamil-BJP-is-trying-to-make-politics

தமிழகத்தில் ரஜினியை வைத்து அரசியல் செய்ய பா.ஜனதா முயற்சி மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா பேட்டி

சென்னை

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருநங்கையான என்னை, மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமித்த ராகுல்காந்திக்கு நன்றி. இந்தியாவில் மிக பழமையான கட்சியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது திருநங்கைகளுக்கு கிடைத்த பெருமை. ராகுல்காந்தி பிரதமராக வந்தால் திருநங்கைகள், பெண்களுக்கு நல்லது செய்வார்.

மோடி அரசு பெண்களுக்காக எதுவுமே செய்யவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. மோடி தந்த வாக்குறுதியின்படி 8 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கவேண்டும். ஆனால் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் பறிபோய் உள்ளது. ஏழை பெண்கள், கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பே இல்லை.

ரஜினியை ஏஜெண்டாக வைத்துக்கொண்டு தமிழகத்தில் அரசியல் செய்ய பாரதீய ஜனதா கட்சி முயல்கிறது. எந்த ‘பேட்டை’க்கு போனாலும், மக்கள் ‘விஸ்வாசம்’ இல்லை என்றால் முதல்–அமைச்சராக முடியாது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படிப்படியாக மக்களை சந்தித்து முன்னேறியவர்கள். ஆனால் ரஜினி, எடுத்த உடனேயே முதல்–அமைச்சராக வேண்டும் என்று பேசுகின்றனர். எந்த காலத்திலும் இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.