Templates by BIGtheme NET
Farmers-protest-Do-agitators-hold-human-meat

டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் வாயில் கவ்வியது மனித மாமிசமா? போலீசார் விசாரணை

புதுடெல்லி

காவிரி மேலாண்மை வாரியம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் 2-ம் கட்ட போராட்டம் நடந்து வருகிறது. முதல் மற்றும் 2-ம் கட்ட போராட்டம் ஒட்டுமொத்தமாக நேற்று 100-வது நாளை எட்டியது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் காலை 11 மணி அளவில் ஒரு பொட்டலத்தில் மாமிசம் கொண்டு வந்தார். துண்டு துண்டாக கிடந்த அந்த மாமிசத்தை போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் ஆளுக்கு ஒன்றாக எடுத்து வாயில் கவ்விக்கொண்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறு ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் அய்யாக்கண்ணு கூறுகையில், ‘விவசாயிகளை மனித மாமிசம் தின்னும் நிலைக்கு மத்திய அரசு கொண்டு வந்து விட்டது. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்‘ என்றார்.

விவசாயிகள் மனித மாமிசத்தை வாயில் கவ்வி போராட்டம் நடத்தியதாக கூறியது, ஜந்தர் மந்தர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மையிலேயே அவர்கள் மனித மாமிசத்தைத்தான் பயன்படுத்தினார்களா? அப்படியெனில் மனித மாமிசம் கிடைக்க உதவியது யார்? என்பது பற்றி டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*