Home » குமரி செய்திகள் » டெய்லி 8 குவாட்டர் அடிப்பேன் போலீசாருடன் முதியவர் வாக்குவாதம்
03

டெய்லி 8 குவாட்டர் அடிப்பேன் போலீசாருடன் முதியவர் வாக்குவாதம்

குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் விடுமுறையை முன்னிட்டு கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

வெண்டலிக்கோடு அடுத்துள்ள அண்டூர் பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (61). இவர் மிலாடி நபியையொட்டி டாஸ்மார்க் கடை விடுமுறை என்பதால் அப்பகுதி டாஸ்மார்க் சென்று கள்ள சந்தையில் வியாபாரம் செய்வதற்காக எட்டு குவாட்டர்

பாட்டில் வாங்கியுள்ளார். இந்நிலையில் வரும் வழியில் கொற்றிக்கோடு காவல் நிலைய எஸ்.ஐ ரசல் ராஜ் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளார். இதில் எட்டுபாட்டில் அவரிடம் இருந்தது தெரியவந்தது. ஆனால் ஞானதாஸ் நான் ஒரு நாளைக்கு 8 குவாட்டர் குடிப்பேன் நாளை கடை விடுமுறை என்பதால் இதை வாங்கி செல்கிறேன் என போலீசாரிடம் விதண்டா வாதம் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் ஞானதாஸை அலேக்காக காவல் நிலையம் தூக்கி சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஞானதாஸ் கள்ளச்சந்தையில் விற்கவே இந்த மது பாட்டில்களை வாங்கி வந்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.