குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் நேற்று அருமனை சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டெம்போவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் டெம்போ நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார் துரத்தி சென்றனர். அப்போது டெம்போவை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்னர் டெம்போவை சோதனை செய்தபோது, அதில் சிறு, சிறு மூடைகளில் 2½ டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து டெம்ேபாவுடன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

டெம்போவில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3
Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65